Paristamil Navigation Paristamil advert login

வருடத்துக்கு ஏழுமணிநேரம் ஊதியமற்ற வேலை! - நிராகரித்தார் பிரதமர்!!

வருடத்துக்கு ஏழுமணிநேரம் ஊதியமற்ற வேலை! - நிராகரித்தார் பிரதமர்!!

28 தை 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 7942


வருடத்துக்கு ஏழு மணிநேரம் ஊதியமற்ற வேலை பார்க்கவேண்டும் எனும் திட்டத்தை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ நிராகரித்துள்ளார்.

அமைச்சர் Catherine Vautrin, “வருடத்துக்கு ஏழு மணிநேரம் ஊதியமற்று பணிபுரிவதால் பெருமளவு நிதியினை சேமிக்கமுடியும்” எனும் புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்தார். புதிய வரவுசெலவுத்திட்டத்தில் மேற்படி வரைவு இணைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ”வேலை இலவசமானதாக இருக்கக்கூடாது!” என தெரிவித்து அதனை நிராகரித்துள்ளார்.

”வேலைக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும் என நான் நினைக்கிறேன். எல்லா வேலைகளுக்கும் சம்பளம் வழங்கப்படவேண்டும். வேலை இலவசமாக இருக்கக்கூடாது. இது தொடர்பில் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன்!” என அவர் மேலும் தெரிவித்தார்.



 

வர்த்தக‌ விளம்பரங்கள்