அமெரிக்காவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

28 தை 2025 செவ்வாய் 09:38 | பார்வைகள் : 5318
அமெரிக்க நகரமொன்றில் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவான நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தங்கள் வீடுகள் விழுந்துவிடுமோ என பயந்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் Massachusetts மாகாணத்திலுள்ள போஸ்டன் நகரில், நேற்று காலை 10.22 மணியளவில் வீடுகள் அதிர்ந்ததை மக்கள் உணர்ந்தார்கள்.
அமெரிக்க நிலவியல் ஆய்வமைப்பு, 4.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் உருவானதாக அறிவித்தது. பின்னர், அது 3.8 ஆக குறைக்கப்பட்டது.
உடனடியாக சமூக ஊடகங்களில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்த போஸ்டன் நகர மக்கள், போஸ்டனில் நிலநடுக்கமா? யாராவது வீடுகள் அதிர்ந்ததை உணர்ந்தீர்களா என கேள்விகள் எழுப்பினார்கள்.
என் வீடு பயங்கரமாக நடுங்கியது என்று ஒருவர் கூற, என் வீடு விழுந்துவிடுமோ என பயந்துவிட்டேன் என ஸ்டெஃபனி என்னும் பெண் தெரிவித்திருந்தார்.