Paristamil Navigation Paristamil advert login

உலகக்கிண்ணத்தில் 53 பந்தில் சதம் விளாசிய த்ரிஷா! மகளிர் கிரிக்கெட்டில் முதல் நபர்..வரலாற்று சாதனை

உலகக்கிண்ணத்தில் 53 பந்தில் சதம் விளாசிய த்ரிஷா! மகளிர் கிரிக்கெட்டில் முதல் நபர்..வரலாற்று சாதனை

28 தை 2025 செவ்வாய் 10:06 | பார்வைகள் : 2558


மகளிர் U19 உலகக்கிண்ண தொடரின் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் கொன்கடி த்ரிஷா அதிரடியாக சதம் அடித்தார்.

கோலாலம்பூரில் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாடியது.

கொன்கடி த்ரிஷா மற்றும் கமலினி கூட்டணி அதிரடியில் மிரட்டியது. இவர்களது இணை முதல் விக்கெட்டுக்கு 80 பந்துகளில் 147 ஓட்டங்கள் குவித்தது.

கமலினி 42 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

எனினும் பவுண்டரிகள், சிக்ஸர் என தெறிக்கவிட்ட த்ரிஷா 27 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

தொடர்ந்து ருத்ர தாண்டவம் ஆடிய த்ரிஷா, 53 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் மகளிர் U19 உலகக்கிண்ணத் தொடரில் சதம் விளாசிய வீராங்கனை எனும் சாதனை படைத்தார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்