இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு
 
                    28 தை 2025 செவ்வாய் 10:34 | பார்வைகள் : 4838
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பணயக் கைதிகள் தொடர்பான ஹமாஸின் பட்டியலை மேற்கோள் காட்டி இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏனைய 25 பேர் உயிருடன் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸிடமிருந்து பணயக் கைதிகளின் தகவல்களைப் பெற்ற இஸ்ரேல், அவர்களின் நிலைமை குறித்து குடும்பங்களுக்கு அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில் ஒரு தொகுதியினர் நாளை மறுதினமும், மற்றுமொரு தொகுதியினர் எதிர்வரும் சனிக்கிழமையும் விடுவிக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan