பிரித்தானிய நிறுவனங்களில் இனி வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை

28 தை 2025 செவ்வாய் 11:08 | பார்வைகள் : 4857
பிரித்தானியாவிலுள்ள 200 நிறுவனங்கள், வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்க முடிவு செய்துள்ளன.
இதனால், சுமார் 5,000 பணியாளர்கள் பயனடைய இருக்கிறார்கள்.
மனிதன் வேலை செய்வதே வாழ்வதற்காகத்தான். ஆனால், பலருடைய வாழ்க்கை பெரும்பாலும் அலுவலகத்திலேயே முடிந்துவிடுகிறது.
குடும்பத்துக்காக உழைத்துவிட்டு, குடும்பத்துக்கு பணம் மட்டும் கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் நேரம் செலவிடமுடியாத பெற்றோரும், பெற்றோருடன் நேரம் செலவிட ஏங்கும் பிள்ளைகளும் உலகம் முழுவதும் உண்டு.
ஆக, சில நாடுகள், வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை வைத்தால் என்ன ஆகும் என சோதனை முயற்சிகளைத் துவங்கின.
சோதனைகளின் முடிவுகள், பணியாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுடன், நிறுவனங்களுக்கும் நல்ல உற்பத்தி கிடைப்பதாகத் தெரிவித்தன.
எனவே, சில நாடுகள் வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை திட்டத்தின் சோதனை முயற்சிகளை தொடர்கின்றன.
இந்நிலையில், பிரித்தானியாவிலுள்ள 200 நிறுவனங்கள், வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்க முடிவு செய்துள்ளன.
இத்திட்டத்தை முன்வைத்தவர்கள், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வேலை என்பது 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட விடயம், அது இப்போதைக்கு வேலைக்கு ஆகாது என்கிறார்கள்.
வராத்தில் நான்கு நாட்கள் வேலைத் திட்டத்தின் மூலம், 50 சதவிகிதம் கூடுதல் free timeஉடன், மக்கள் சந்தோஷமான, திருப்திகரமான வாழ்க்கை வாழ முடியும் என்கிறார் இத்திட்டத்தை முன்வைத்த அமைப்பின் இயக்குநரான Joe Ryle என்பவர்.
விடயம் என்னவென்றால், வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்தாலும், பணியாளர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே ஊதியம் வழங்கப்படும், நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்வதால், அதற்காக எந்த பிடித்தமும் செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1