Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புடினை சந்திக்கும் ட்ரம்ப்

 உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர  புடினை சந்திக்கும் ட்ரம்ப்

28 தை 2025 செவ்வாய் 11:20 | பார்வைகள் : 5460


உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர, டொனால்ட் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தையில் என்ன நடந்தாலும் ரஷ்யாவிற்கு நல்லது என நம்புவதாக, ரஷ்ய ஊடகவியலாளர் ஆன்ட்ரி மால்கின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

ரஷ்ய ஊடகவியலாளர் ஆன்ட்ரி மால்கின் இதுகுறித்து பேசும்போது, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களும் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "உலக அரங்கில் ரஷ்யா ஒரு பெரிய சக்தி என்பதைக் காட்ட, அமெரிக்காவுடனான எந்தவொரு உரையாடலையும் புடின் பயன்படுத்துவார். இந்த பேச்சுவார்த்தைகள் எதற்கு வழிவகுக்கும் என்று புடின் எதிர்பார்க்கவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.

என்ன நடந்தாலும் ரஷ்யாவிற்கு நல்லது என்று அவர் உறுதியாக நம்புகிறார். முன்னணியில் விடயங்கள் நன்றாக நடக்கின்றன.
 
எதிரி (உக்ரைன்) மெதுவாக ஆனால் நிச்சயமாக பின்வாங்குகிறார்.

கிரெம்ளினில் தனிப்பட்ட நிலை வலுவாக உள்ளது. தடைகள் மற்றும் நம்பமுடியாத இராணுவ செலவுகள் இருந்தபோதிலும் ரஷ்ய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்