முதலாம் உலகப்போர் போர் நிறுத்தம்! - பரிசில் குவிந்த மக்கள்!!
3 பங்குனி 2018 சனி 10:30 | பார்வைகள் : 18530
1914 ஆம் ஆண்டு முதலாம் உலகமகா யுத்தம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் தொடர்ந்தது... பின்னர் நவம்பர் 11, 1918 ஆம் வருடம் அது முடிவுக்கு வந்தது.
யுத்த நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தானதும் பல்வேறு நாடுகளில் இது கொண்டாடப்பட்டது. குறிப்பாக பிரான்சில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
நான்கு வருடங்களில் பரிசை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் திரும்பி வந்தனர். பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது. இராணுவ வீரர்கள் நாட்டுக்கு திரும்பி வந்தனர்.
சோம்ஸ்-எலிசேயில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரெஞ்சு கொடிகளுடன் கூடினர். நெப்போலியன் வளைவில் பல இராணுவ வீரர்கள் கலந்துகொள்ள அணிவகுப்பு இடம்பெற்றது.
யுத்தத்தினால் பல்வேறு சேவைத் தடங்கல்களை சந்தித்த பத்திரிகைகள் மீண்டும் தங்கள் அச்சுப்பணியினை தூசி தட்டியது. 'PAIX' என கொட்டை எழுத்துக்களில் தலைப்பு பதித்து செய்திகள் வெளியிட்டன.
உணவுகள், பானங்கள் என பல உணவுகள் அளிக்கப்பட்டன. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கபட்டன.
நிகழ்வுகளில் மிக முக்கியமான நிகழ்வாக, அனைத்து நாடுகளின் கொடிகளையும் ஒருசேர அசைத்து ஒற்றுமையை உணத்தியது. புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன இந்த காட்சிகள்.
பரிஸ் உட்பட நாட்டு மக்கள் தங்களின் முதலாவது யுத்த நிறுத்த நாளினை சந்தோசமாக கொண்டாடினர்.