Stains : பாலியல் தாக்குதலுக்கு இலக்கான சிறுமி..!
28 தை 2025 செவ்வாய் 17:02 | பார்வைகள் : 7385
15 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளார்.
Stains (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 25, சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரவு 8 மணி அளவில் குறித்த சிறுமி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவரை இரு நபர்கள் பின் தொடர்ந்து வந்ததாகவும், அதன் பின்னர் ஆள் அரவமற்ற இடத்தில் வைத்து அவரை மடக்கிப்பிடித்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மறுநாள் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan