Stains : உதவிக்காகச் சென்ற தீயணைப்புப்படை வீரர் மீது தாக்குதல்!
28 தை 2025 செவ்வாய் 18:41 | பார்வைகள் : 6197
மீட்புப்பணி ஒன்றுக்காக சென்ற தீயணைப்புபடை வீரர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Stains (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 25, சனிக்கிழமை பிற்பகல், மூன்று மகிழுந்துகள் தீப்பிடித்து எரிவதாக கிடைத்த தகவலை அடுத்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தேசம் தேசமாக பயணிக்கும் நாடோடிகள் சிலர் இருந்த முகாம் ஒன்றுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மகிழுந்துகள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த நிலையி, தீயணைப்பு படையினர் உடனடியாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
ஆனால், எதிர்பாரா விதமாக குறித்த நாடோடிகளால் தீயணைப்பு வீரர்கள் தாக்கப்பட்டனர். அவர்களை கீழே தள்ளி விழுத்தில் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு தீயணைப்பு படையினர் மீட்கப்பட்டனர்.

























Bons Plans
Annuaire
Scan