வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்தின் காரணம் என்ன?

29 தை 2025 புதன் 07:29 | பார்வைகள் : 8565
பிரான்சில் 2024-ம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்கள் வேலை தேடுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமான அளவுக்கு உயர்ந்துள்ளது என (ministère du Travail) தொழில்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது. நீங்கள் அறிந்ததே
சிறப்பாக 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே, இந்த அதிகரிப்பு பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 2024-ம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் 8.5% சதவீதத்தை எட்டியுள்ளது என தெரிவித்துள்ள தொழில்துறை அமைச்சு. பல காரணங்கள் இருப்பினும் சிறப்பாக பணிக்கு அமர்த்துதலில் வீழ்ச்சி மற்றும் வணிக, தயாரிப்பு நிறுவனங்கள் பொருளாதார ரீதியில் திவாலாகி மூடப்படுதலின் அதிகரிப்பு ஆகியவற்றின் பின்னணியில் இந்த வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அரசியலில் இன்று காணப்படுகின்ற தள்ளாடும் தன்மை, உறுதியான நிதிக் கொள்கை இன்மை, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படாமல் இழுபறி நிலையில் உள்ளமை, ஒலிம்பிக் போட்டிகளின் போது பிரமாண்டமான ஆனால் தற்காலிகமாய் தயாரிக்கப்பட்ட வேலைகள் இன்று இல்லாமல் போனமை இந்தத் திடீர் வேலை தேடுவோர் நிலை உச்சிக்கு சென்றுள்ளது என பொருளியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1