Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் திடீரென தோன்றிய பெரிய குழி

ஜப்பானில் திடீரென தோன்றிய பெரிய குழி

29 தை 2025 புதன் 10:36 | பார்வைகள் : 8481


ஜப்பானின் யாஷியோ நகரில் உள்ள ஒரு பரபரப்பான சந்திப்பில் திடீரென தோன்றிய பெரிய குழியில் ஒரு லாரி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 காலை 10 மணி அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், லொறி  சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில், சுமார் 20 அடி ஆழமும் 32 அடி அகலமும் கொண்ட இந்த குழி, நகாகாவா நதி படுகை கழிவுநீர் குழாய் உடைந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விபத்து நடந்ததிலிருந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லொறி ஓட்டுநரின் இருக்கை மணல் மற்றும் சேறால் நிரம்பியுள்ளதால், அவரை மீட்கும் பணிகள் தற்போது சவாலானதாக உள்ளது.

ஓட்டுநருக்கு சுவாசிக்க போதுமான காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காக, மீட்பு குழுவினர் குழியில் காற்றை செலுத்தி வருகின்றனர்.

நிகழ்விடத்தில் படம்பிடிக்கப்பட்ட வான்வழி காட்சிகள், குறைந்தது 12 தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதை காட்டுகின்றன.

டோக்கியோவிற்கு வடக்கே அமைந்துள்ள யாஷியோ நகரில், ஓட்டுநரை பாதுகாப்பாக மீட்க மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்