ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி.. உரிமையாளர் தேடப்படுகிறார்!
29 தை 2025 புதன் 12:15 | பார்வைகள் : 14238
Euro Millions அதிஷ்ட்டலாபச் சீட்டில் ஒரு மில்லியன் யூரோக்கள் வென்ற ஒருவர், அவரது வெற்றித்தொகையை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அவரது வெற்றித்தொகையை பெற்றுக்கொள்ள இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமுள்ளன.
Alpes-Maritimes மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இந்த தொகையை வெற்றிபெற்றுள்ளார். கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி அன்று அவர் வெற்றிபெற்றதாகவும் அவருக்கான தொகையை பெற்றுக்கொள்ள ஜனவரி 31, வியாழக்கிழமை இரவு 11.59 மணிக்குள் முன்வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நேரத்தைக் கடந்ததன் பின்னர் வெற்றியாளர் அவரது வெற்றிப்பணத்தை கோரமுடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan