Paristamil Navigation Paristamil advert login

சளியை விரட்டியடிக்கும் நண்டு ரசம்

சளியை விரட்டியடிக்கும் நண்டு ரசம்

29 தை 2025 புதன் 15:25 | பார்வைகள் : 4026


நண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வயல் நண்டு, பால் நண்டு, கடல் நண்டு என நண்டுகளில் பல வகைகள் உள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் கிடைக்கும் வயல் மற்றும் ஆற்று நீர் நண்டுகளில் தான் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. நண்டில் ரசம், கிரேவி குழம்பு என பலவகையான ரெசிப்பிகள் செய்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். ஆனால் நண்டில் செய்யும் ரசமானது சளி, இருமல் ஆகியவற்றை உடனே சரி செய்து விடும். அதிலும் குறிப்பாக நண்டை இடித்து அதில் செய்யும் ரசத்தை குடித்தால் சளி தொல்லையானது ஒரேடியாக ஓடிவிடும். இப்போது நண்டில் சுலபமாக ரசம் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

நண்டு ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

நண்டு -5
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1/2
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தண்ணீர் - 4 கப்
எண்ணெய் - தேவையான அளவு

மசாலா தயாரிக்க தேவையானவை:

வத்தல் - 5
பூண்டு - 6
இஞ்சி துண்டு - 1 சிறிதளவு
வால் மிளகு - 1/4 ஸ்பூன்
அன்னாச்சி பூ - 1
திப்பிலி - 4

செய்முறை:

முதலில் எடுத்து வைத்த நண்டை நன்றாக தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வயல் அல்லது ஆற்று நண்டு கிடைக்கவில்லை என்றால் கூட, சாதாரண நண்டை பயன்படுத்துங்கள். இப்போது மிக்ஸி ஜாரில் வத்தல், திப்பிலி, அன்னாச்சி பூ, மிளகு, பூண்டு மற்றும் இஞ்சி துண்டு ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு மண் சட்டியை எடுத்து அதில் இடித்து வைத்துள்ள நண்டை போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு கிளறி விடுங்கள். அடுத்ததாக அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது மண் சட்டியை அடுப்பில் வைத்து ரசம் சுண்டி வந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கி விடுங்கள். நீங்கள் விரும்பினால் இதில் சிறிதளவு துளசி இலைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சளியை விரட்டியடிக்கும் சுவையான நண்டு ரசம் தயார்.

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்