Paristamil Navigation Paristamil advert login

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா..?

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா..?

29 தை 2025 புதன் 15:28 | பார்வைகள் : 535


நம் அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒரு பொதுவான குறிக்கோள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை கற்று கொள்வதாகும். மகிழ்ச்சி என்பது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்க வேண்டியதில்லை, சில எளிய மாற்றங்கள் உங்கள் மனநிலையை சிறப்பாக வைக்கவும், உங்கள் நாட்களை மகிழ்ச்சியாக வைக்கவும் உதவுகின்றன. பலருக்கு, மகிழ்ச்சியாக இருப்பது அல்லது மகிழ்ச்சியை கண்டறிவது என்பது பற்றி எந்த விதிகளும் இல்லை என்றாலும், இங்கே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சில டிப்ஸ்கள் மிகவும் எளிமையானவை மற்றும் மகிழ்ச்சியாக இருக்க கணிசமாக உதவ கூடியவை.

மனநிலை சிறப்பாக இருக்க நன்கு தூங்குங்கள்: இரவில் போதுமான ஓய்வு பெறுவது உங்கள் நாளை சிறப்பானதாக மாற்றும். ஒவ்வொரு இரவும் 7-9 மணிநேரம் நன்கு ஆழ்ந்து தூங்குவதை இலக்காக கொள்ளுங்கள். மொபைலை பார்ப்பதற்கு பதிலாக ஒரு புத்தகம் படிக்க துவங்குவதுடன் உங்கள் இரவு உறக்க நேர வழக்கத்தை பின்பற்றுங்கள்.

உங்கள் அலுவலகத்திற்கு அருகில் வசிக்க முன்னுரிமை கொடுங்கள்: நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வசிக்கவோ அல்லது வீட்டிலிருந்து வேலை செய்வதையோ தேர்ந்தெடுக்க பரிசீலிக்கவும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் பயண நேரம் குறைவதால் ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கான நேரத்தை உங்களுக்கு லைக்கும். இதன் மூலம் உங்களின் தினசரி வேலைகளுக்கு போதுமான நேரத்தையும், சிறந்த சமூக வாழ்க்கையையும் பெறலாம்.

ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை குறைக்கவும்: உங்களுக்குப் பிடித்தமான இனிப்புகளை அலல்து நொறுக்கு தீனிகளை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது என்றாலும், தினமும் தவறாமல் சத்தான உணவுகளில் கவனம் செலுத்த முயற்சிக்கவும். சிப்ஸிற்கு பதில் உங்கள் டயட்டில் பழங்கள் அல்லது நட்ஸ்களை ஸ்னாக்காக சேருங்கள். சர்க்கரை நிறைந்த பானங்களுக்குப் பதிலாக வீட்டில் செய்த ஸ்மூத்தியை ஏசுத்து கொள்ளுங்கள்.

 நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஹேங்அவுட்: நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் செலவிடும் சிறந்தநேரம் உங்கள் மனநிலையை கணிசமாக மேம்படுத்தும், உற்சாகமாக வைக்கும். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை அன்புக்குரியவர்களை அடிக்கடி சந்தித்து மகிழுங்கள்.

ட்ரிப் திட்டமிடுங்கள்: உங்களால் தற்போதைய சூழலில் ட்ரிப் எங்கும் செல்ல முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் பயணம் செய்ய திட்டமிடுவது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இதுவரை நீங்கள் பார்த்திராத புதிய நகரத்திற்கு சென்று சுற்றி பார்ப்பது அல்லது இயற்கையில் நடைபயணம் செய்வது போன்ற உங்களை உற்சாகப்படுத்தும் பயண திட்டத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.

 மொபைல் பயன்பாட்டிற்கு பிரேக் கொடுங்கள்: மன அழுத்தத்தை குறைக்கவும், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாட்டில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தொந்தரவு ஏதுமின்றி பொழுது போக்கில் ஈடுபட அல்லது இயற்கையை ரசிக்க பகலில் குறிப்பிட்ட நேரம் மொபைல் பயன்படுத்தாமல் இருங்கள்.

உங்களை குஷியாக்கும் புதிய செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்: ஓவியம் வரைவது அல்லது இசை கருவியை வாசிக்க கற்று கொள்வது போன்ற புதிய திறமை அல்லது பொழுதுபோக்கை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களை உற்சாகமாக வைத்து கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் ஆன்லைன் கோர்ஸ்களை கண்டறிந்து சேரவும்.

 நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்: நீங்கள் அதிகம் புழங்கும் இடத்தை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்து கொள்வது உங்கள் மனதைத் தெளிவுபடுத்தும். எனவே உங்கள் பணியிடம் அல்லது வீட்டை ஒழுங்கமைக்க ஒவ்வொரு வாரமும் சிறிது நேரத்தை ஒதுக்கி, உங்களுக்கு பிடித்தவாறான இனிமையான சூழலை உருவாக்குங்கள்.

மசாஜ் செய்து கொள்ளுங்கள்: உங்கள் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைத்து கொள்ள உங்களுக்கு பிடித்தமான ஸ்பாவில் மசாஜ் செஷனை புக் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே மசாஜ் செய்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

நேர்மறை எண்ணங்கள் கொண்ட, மகிழ்ச்சியான நபர்கள் : உங்களை சுற்றி எப்போதுமே நேர்மறை எண்ணங்கள் கொண்ட, மகிழ்ச்சியான நபர்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அவர்களுடன் நேரம் செலவிடுங்கள். உங்களை ஊக்குவிக்கும் நண்பர்களுடன் அடிக்கடி வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கவும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்