Paristamil Navigation Paristamil advert login

மின் அளவீடு பெட்டியில் மோசடி.. 150,000 யூரோக்கள் சேதம்!!

மின் அளவீடு பெட்டியில் மோசடி.. 150,000 யூரோக்கள் சேதம்!!

29 தை 2025 புதன் 16:01 | பார்வைகள் : 5101


பணம் பெற்றுக்கொண்டு மின் அளவீடு பெட்டியில் மாற்றங்கள் செய்துகொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரால் 150,000 யூரோக்கள் வரை மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Hauts-de-France மாவட்டத்தின் Valenciennes நகரில் வைத்து குறித்த நபர் கடந்த வருடம் செப்டம்பரில் கைது செய்யப்பட்டிருந்தார். 39 வயதுடைய குறித்த நபர் பல நூறு வாடிக்கையாளர்களுக்கு Enedis நிறுவனத்தின் பச்சை நிற Linky மின் அளவீடு பெட்டியில் மாற்றங்கள் செய்துள்ளார்.

மின்சாரக்கட்டணத்தை 50 தொடக்கம் 70% சதவீதம் வரை குறைத்து கொடுத்துள்ளார். இதற்காக 200 யூரோக்களில் இருந்து 400 யூரோக்கள் வரை கட்டணம் அறவிட்டுள்ளார்.

குறித்த நபருக்கு வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்