Paristamil Navigation Paristamil advert login

மியன்மாரிலிருந்து தப்ப முயன்றோம்- ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்கள்

 மியன்மாரிலிருந்து தப்ப முயன்றோம்- ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்கள்

29 தை 2025 புதன் 16:07 | பார்வைகள் : 184


சிலர் குழந்தைகளை இழந்துள்ளனர், சிலர் சகோதரங்களை இழந்துள்ளனர்சிலர் கணவன்மாரை இழந்துள்ளனர், நாங்கள் எங்கள் நிலங்களை விற்று படகுகளை வாங்கி மியன்மாரிலிருந்து தப்ப முயன்றோம் என முல்லைத்தீவு கரைக்கு வந்து சேர்ந்த ரோகிங்யா அகதிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் சிஎஸ்ஆர்அமைப்பும் இலங்கை முஸ்லீம் கவுன்சிலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ரோகிங்யா யார் அவர்கள்?அவர்கள் ஏன் இலங்கைக்கு வந்தனர்,நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட வீடியோக்களில் முல்லைத்தீவு கரைக்கு வந்து சேர்ந்த ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களின்  வாக்குமூலங்கள்காண்பிக்கப்பட்டன.
.
ரோகிங்யா அகதிகள் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை திருகோணமலை ஊடகவியலாளர் சஞ்சீவன் துரைநாயகம் ரோகிங்யா அகதிகளின் வாக்குமூலங்களை வீடியோக்களாக தனது முகநூலில் வெளியிட்டிருந்தார்.

குறிப்பிட்ட வீடியோக்களே இன்று காண்பிக்கப்பட்டன.

அதில் ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளதாவது.

மியன்மாரும் ஏனைய தரப்பினரும் ஆயுதமோதலில் ஈடுபட்டுள்ளனர்,ஆனால் அவர்கள் எங்கள் குடும்பங்களை கொல்கின்றனர் வேட்டையாடுகின்றனர்.

சிலர் குழந்தைகளை இழந்துள்ளனர், சிலர் சகோதரங்களை இழந்துள்ளனர்,சிலரின் தந்தைமார் உயிர் தப்பியுள்ளனர் ஆனால் கணவன்மார் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறான சூழ்நிலையால் நாஙகள் இங்கு வந்துள்ளோம்.

ஆயுததரப்பினர் மத்தியில் மோதல்கள் இடம்பெற்றுகின்றது ( ஆர்கன் இராணுவம் - மியன்மார் இராணுவம்)வான்வெளிமூலம் குண்டுகளை வீசி பொதுமக்கள் பலரை கொலை செய்துள்ளனர் அதன் காரணமாகவே நாங்கள் அங்கிருந்து தப்பியோடினோம்.

மொக்ஸ்கள் வீடுகளை தீயிட்டு கொழுத்துகின்றனர்,எங்களை துன்புறுத்துகின்றனர்.எங்களால் இதற்குமேல் அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை.எங்களால்  பிள்ளைகளை காப்பாற்ற முடியாததால் நாங்கள் இங்கு வந்தோம்.

மக்கள் ஒருவர்பின்ஒருவராக கொல்லப்படுவதால் நாங்கள் அங்கிருப்பது பாதுகாப்பற்றதாக உணர்ந்தோம்.

தொடர்ச்சியான நிறுத்தப்படாத குண்டுவீச்சுக்கள், அழிவுகள் காரணமாக நாங்கள் இங்கு வந்தோம்.

2012 இல் அரசாங்கம் எங்கள் வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கியது 2017 இல் இனப்படுகொலையில் ஈடுபட்டது.

நாங்கள் அரகனின் துன்புறுத்தலின் கீழ் வசிக்கின்றோம்,அங்கு சுதந்திரம் இல்லை நாங்கள் எங்கும் செல்வதற்கும் அனுமதிக்கமாட்டார்கள்.
எங்கள் கிராமங்களுடனான தொடர்பாடல் துண்டிக்கப்பட்டது.

நாங்கள் அனைவரும் அகதிகளாகி  முகாம்களில் வந்தோம்,12 வருடங்களாகிவிட்டது, அரசாங்கத்திற்கும் கிளர்ச்சிக்காராகளிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுவதால் ஐநா எங்களின் உதவிக்கு வருவதில்லை.150,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அந்த பகுதிக்கு எவரும் செல்ல முடியாது,அந்த பாதையை மூடிவிட்டார்கள்,ஐக்கியநாடுகளின் அமைப்புகள் முன்னர் அந்த பகுதியில் சேவையில் ஈடுபட்டன,2023 முதல் யுஎன்எச்சிஆரால் அங்கு செல்ல முடியாது,நகரங்கள் மூடப்பட்டுவிட்டன,2012 முதல் 2023முதல் யுஎன்எச்சீஆரும் ஏனைய அமைப்புகளும் உலர் உணவு போன்றவற்றை வழங்கிவந்தன. 2023 முதல் அவர்கள் அதன் நிறுத்திவிட்டனர்.அதன் பின்னர் எவரும் அங்கு செல்லவில்லை.

நாங்கள் எங்கள் நிலங்களை விற்று படகுகளை வாங்கி மியன்மாரிலிருந்து தப்ப முயன்றோம்.
நாங்கள் எங்கள் உடமைகள் அனைத்தையும் பெண்களின் நகைகளையும் விற்றோம்.

நன்றி virakesari

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்