எரிமலையில் இருந்து தப்பித்த உலகின் மிகப்பெரிய அதிஷ்ட்டசாலி!!
18 மாசி 2018 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18214
மறுநாள் காலை 7.52 மணிக்கு Mt. Pelée எரிமலை வெடித்து, ஊருக்குள் எரிமலை குழம்புகள் ஆறாய் பாய்ந்தது.
ஊர் முழுவதும் ஓலச்சத்தம். சிறைக்குள் இருக்கும் Sylbaris க்கு என்ன நடக்கிறது என்பதை சில நொடிகளில் புரிந்துகொள்ள கூடியதாய் இருந்தது.
ஊருக்குள் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துக்கொண்டு முன்னேறிய எரிமலை, Sylbaris இருந்த சிறைச்சாலையில் வாசலையும் தொட்டது. கன நொடியில் சிறைச்சலையின் சுவர்கள் வெப்பமாகி.. அனல் தகதகத்தது.
வெப்பக்காற்று அதிகமாக.. 'காப்பாற்றுங்கள்!' என சத்தமாக கத்தினார் Sylbaris. ஆனால் அனைவரும் தங்களை காப்பாற்றிக்கொள்வதிலேயே முனைப்பாக இருந்தார்கள்.
சிறை அறையின் கதவுக்கு கீழே, ஒரு இஞ்ச் அளவிலான இடைவெளி இருந்தது. தற்குள்ளால் தான் காற்றும் வெளிச்சமும் வரும்.
அதற்குள்ளால் வெப்பம் மிக மோசமாக உள்நுழைய ஆரம்பித்தது. உடனே சுதாகரித்துக்கொண்ட Sylbaris, தன் ஆடைகளை களைந்து.. அதைக்கொண்டு கதவின் இடுக்கில் அடைத்து அணை கட்டினார்.
வெப்பம் உள் நுழைவது குறைந்தது. இருப்தாலும், ஆடை தீப்பற்றிக்கொண்டால்..? என யோசித்த Sylbaris, குறைந்த பட்ச பாதுகாப்பு என கருதி... அந்த ஆடையின் மேல் சிறுநீர் கழித்தார். ஆடைகள் ஈரமாயின.
அதிஷ்ட்டம் அவர் வசம் என்பதால், ஆடைகள் தீப்பற்றவில்லை. ஆனால் நான்கு பக்க சுவர்களும் கொதிநிலையை அடைந்த நிலையில், Sylbaris இன் உடலில் இருந்த ரோமங்கள் சுருண்டு... கருகின. உடலில், கால்களும் பின் பகுதிகளும் கருகின.
சிறிது நேரம் கழித்து Sylbaris உடல் மொத்தமாக தகதகத்து.. அவரால் நிலையாக இருக்க முடியாமல் சுயநினைவு இழந்து மயங்கி கீழே விழுகிறார்.
******
இரண்டாம் நாள்... அல்லது மூன்றாம் நாள் காலை.. மயக்கத்தில் இருந்து தெளியும் போது, Sylbaris இன் உடலில் பல பாகங்கள் எரிந்து கருகிப்போயிருந்தது.
நான்காம் நாள் மயானமாகிப்போயிருந்த ஊருக்குள் மீட்புக்குழு நுழைகிறது. குறித்த சிறைச்சாலைக்குள் இருந்து அழுகுரல் கேட்க.. மீட்புக்குழுவால் கதவு திறக்கப்பட்டு
Sylbaris காப்பாற்றப்படுகிறார்.
அதன் பின்னர் தான் Sylbaris வெளி உலகம் சுடுகாடாய் மாறியிருப்பதை உணருகிறார். ஒருவனை பழிவாங்கவேண்டும் என எண்ணியிருந்த நபரும் எரிமலைக்கு பலியாகியிருந்தார்.
'எரிமலையில் இருந்து தப்பித்த உலகின் மிகப்பெரும் அதிஷ்ட்டசாலி' என பின்னர் அடையாளப்படுத்தப்பட்ட Sylbaris, பின்நாட்களில் சர்கஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.
Sylbaris, 1929 ஆம் ஆண்டில் இயற்கை மரணம் எய்தினார்.
முற்றும்.