Paristamil Navigation Paristamil advert login

இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ்; வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த இருவர் நாடு கடத்தல்!

இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ்; வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த இருவர் நாடு கடத்தல்!

30 தை 2025 வியாழன் 02:53 | பார்வைகள் : 4577


இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் இருவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவுகிறது. இது தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன. தற்போது இந்த அமைப்பு 8 நிறங்களில் நோட்டீஸ் வெளியிடுகிறது.

அந்த வகையில், ஒரு நாட்டில் தேடப்படும் நபரை வேறுநாட்டில் கைது செய்வதற்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. இந்நிலையில், சி.பி.ஐ., ஒருங்கிணைந்து நடத்திய நடவடிக்கையில் இருவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன்படி தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் பதுங்கி இருந்த வீரேந்திரபாய் மணிபாய் படேல், ஜனார்த்தனன் சுந்தரம் ஆகிய இருவர் நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஒருவர் நிதி மோசடி வழக்குகளில் தமிழக போலீசாராலும், மற்றொருவர் குஜராத் போலீசாராலும் தேடப்பட்டு வந்தார்.

ரூ.87 கோடி முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாக, ஜனார்த்தனன் சுந்தரம் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இவர் தாய்லாந்து பாங்காக்கில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா விமான நிலையத்தில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது கிரிமினல் சதி, ஏமாற்றுதல், வட்டியை திருப்பி செலுத்த தவறியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்