Coupe de France : தீவிர விற்பனையில் போலி நுழைவுச் சீட்டு.. ஏமாற வேண்டாம்!!

30 தை 2025 வியாழன் 09:54 | பார்வைகள் : 8429
'பிரெஞ்சுக் கிண்ணம்' Coupe de France உதைபந்தாட்ட போட்டிகள் முழு மூச்சாக இடம்பெற்று வருகிறமை அறிந்ததே. பெப்ரவர் 4 ஆம் திகதி PSG எதிர் Le Mans FC அணிகளுக்கிடையே போட்டி இடம்பெற உள்ளது.
இந்த போட்டிக்கான நுழைவுச் சீட்டுகள் பெறுவதில் பெரும் போட்டி நிலவுவதால், வழக்கமான தொகையை விட பல மடங்கு அதிக தொகைக்கு விற்பனை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. €46 யூரோக்களுக்கு வாங்கப்பட்ட நுழைவுச் சிட்டைகளை €250 யூரோக்கள் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலர் விளம்பரப்படுத்துவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் பல விளம்பரங்கள் போலியானவை எனவும், போலி நுழைவுச் சிட்டைகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த போலி நுழைவுச் சிட்டைகள் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1