Paristamil Navigation Paristamil advert login

டெஸ்டில் ஜாம்பவானின் சாதனை தகர்த்த அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா

 டெஸ்டில் ஜாம்பவானின் சாதனை தகர்த்த  அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா

30 தை 2025 வியாழன் 10:35 | பார்வைகள் : 6287


இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் விளாசியதன் மூலம் அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா சாதனை படைத்துள்ளார்.

காலியில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் அவுஸ்திரேலியா துடுப்பாடி வருகிறது.

தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (Usman Khawaja) தனது 16வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
19 மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் கவாஜா சதம் அடித்துள்ளார்.

கடைசியாக 2023ஆம் ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் அவர் சதம் விளாசியிருந்தார்.

இந்த சதம் மூலம், இலங்கை மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிக வயதில் சதம் அடித்த இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (37 வயது) மற்றும் பாகிஸ்தானின் யூனிஸ் கான் (37 வயது) ஆகியோரின் சாதனையை கவாஜா (38 வயது) தகர்த்தார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்