Paristamil Navigation Paristamil advert login

DeepSeek, ChatGPT, Llama-க்கு போட்டியாக புதிய AI மொடலை அறிமுகம் செய்த அலிபாபா நிறுவனம்

DeepSeek, ChatGPT, Llama-க்கு போட்டியாக புதிய AI மொடலை அறிமுகம் செய்த அலிபாபா நிறுவனம்

30 தை 2025 வியாழன் 11:31 | பார்வைகள் : 2117


Deepseek's AI, OpenAI's GPT-4o மற்றும் Llama AI -க்கு போட்டியாக அலிபாபா நிறுவனம் தனது AI மாடலின் குவென்2.5- மேக்ஸ் (Qwen2.5 Max) என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

அலிபாபா நிறுவனம் தனது AI மாடலின் குவென்2.5- மேக்ஸ் (Qwen2.5 Max) என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

இது டீப்சிக் (Deepseek's AI), ஓப்பன்ஏஐ-யின் ஜிபிடி (OpenAI's GPT-4o) மற்றும் மெட்டா நிறுவனத்தின் Llama AI ஆகியவற்றை விட சிறப்பாக செயல்பட்டதாக அலிபாபாவின் கிளவுட் டிவிஷன் (Alibaba's cloud division) தனது அறிக்கையில் கூறியுள்ளது.

சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள டீப்சீக் (DeepSeek) AI மொடல்கள் அறிமுகம் செய்து 20 மாதங்களே ஆகியுள்ளது.

இது குறைந்த விலை மற்றும் அதிக செயல்திறன் கொண்டதாக இருந்ததால் சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால், உலகளாவிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐ நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவில் தொழில்நுட்பங்கள் ரீதியாக கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், அலிபாபா தனது புதிய ஏஐ மாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள AI நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு கடும் போட்டி உண்டாகியுள்ளது.

அண்மையில், ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், டீப்சிக் நிறுவனத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டு அதன் முன்னேற்றத்தை சுவாரசியம் என்று குறிப்பிட்டார்.               

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்