'பராசக்தி' பட பிரச்சனை முடிவுக்கு வந்ததா?

30 தை 2025 வியாழன் 13:28 | பார்வைகள் : 4720
நேற்று ஒரே நாளில் ’பராசக்தி’ என்ற டைட்டில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திற்கும், விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் படத்திற்கும் வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரு தரப்பினரும் ’பராசக்தி’ படத்தின் டைட்டிலை தாங்கள் பெற்றதற்கான ஆதாரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த நிலையில், தற்போது இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ’பராசக்தி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பேச்சுவார்த்தையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் "பராசக்தி" என்ற டைட்டிலை சிவகார்த்திகேயன் படக்குழு பயன்படுத்த விஜய் ஆண்டனி ஒப்புக்கொண்டு உள்ளதாகவும், அதே நேரத்தில் ’பராசக்தி’ டைட்டிலை விஜய் ஆண்டனி தனது படத்தின் ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளுக்கு பயன்படுத்துவார் என்றும் தெரிகிறது.
இதனை அடுத்து, விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் தமிழ் டைட்டில் "சக்தி திருமுருகன்" என்றும், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு "பராசக்தி" என்ற டைட்டிலை வைப்பதாகவும், புதிய தெலுங்கு டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு தான் "பராசக்தி" என்ற தலைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, இரு தரப்பினரும் இந்த பிரச்சனை சுமுகமாக முடித்து விட்டதாக கூறப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1