தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!
14 மாசி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 18242
வழியில் கண்டதை எல்லாம் எரித்து, தன்னுள் அடக்கிக்கொண்டு முன்னேறிய எரிமலை குழம்புகள்... மனிதர்களில் சிறிவர்கள் பெரியவர்கள்.. பெண்கள் குழந்தைகள் என எதையும் பார்க்கவில்லை.
வானத்தில் 60 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு கரும்புகை சூழ்ந்துகொண்டது. முழுத்தீவும் பற்றி எரிவதுபோல் விகாரமாக காட்சியளித்தது. கிட்டத்தட்ட மணிக்கு 670 கிலோ மீட்டர்கள் வேகத்தில் எரிமலை குழம்புகள் பயணித்ததாம். என்றால், பத்து நிமிடத்துக்குள் மொத்த நகரையும் சூறையாடிவிட்டு சென்றுள்ளது.
21 சதுர கிலோமீட்டர்கள் தூரத்துக்கு நகரில் எதுவும் மிஞ்சவில்லை. கட்டிடங்களையும் உருக்குலைத்தது எரிமலை.
ஆரம்பத்தில் 30,000 பேர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் மேற்கொண்ட முழுமையான ஆராய்ச்சியில் அதற்கும் மேலாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கபட்டது. இந்த நகரில் இருந்து இருவர் தப்பித்ததாக முந்தய பகுதியில் குறிப்பிட்டோம் இல்லையா, அதில் ஒருவர் நகரின் எல்லையில், உயரமான பகுதி ஒன்றில் வசித்தவர்.
மற்றையவர் பெயர் Louis-Auguste Cyparis. இவர் உயிர் பிழைத்தது மிகப்பெரிய அதிஷ்ட்டம். அதன் பின்னால் பெரிய கதை ஒன்று உள்ளது. (நாளை படிக்கலாம் அதை)
இந்த நகரில் உயிரிழந்தவர்கள் தவிர, தீவின் ஏனைய பகுதிகளில் வசித்த பலர் கடுமையான வெப்பத்தாக்குதலுக்கு உள்ளாகினர்.
எரிமலை குழம்புகள் எதுவும் படாமலேயே உடல் கருகியது. மோசமான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நீர் தேக்கங்கள் நீர் தொட்டிகள் அனைத்தும் கொதிநீராக மாறியது.
கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சிலர், அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர். பின்னர் அமெரிக்கா அவசர உதவி செய்ததும்... மீட்புக்குழு, ஆராய்ச்சி குழு வந்ததும்... எரிமலை குழம்பு கொண்டுசென்ற உடல்கள் தவிர மீதமான உடல்களை குழி தோண்டி புதைத்ததும் என அடுத்த ஆறு நாட்கள் கண்ணீர் நாட்கள்.
தற்போது 24 மணிநேர எரிமலை எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்போடு குறித்த Saint-Pierre நகரில் 4,300 பேர்கள் (2013 ஆம் ஆண்டு தரவு) வசிக்கின்றனர்.
Louis-Auguste Cyparis இன் கதை... நாளை!!