தமன் மீண்டும் நடிக்க வந்துள்ளாரா ?

30 தை 2025 வியாழன் 13:44 | பார்வைகள் : 3898
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தமன். தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் இன்னும் தனக்கான ஒரு இடத்தைப் பிடிக்காமல் இருக்கிறது. அவரது இசையில் வெளிவந்த 'வாரிசு' பாடல்கள்தான் அவருக்கான சூப்பர் ஹிட் அடையாளமாக இருக்கிறது.
தமிழில் முதன் முதலில் அவர் ஒரு நடிகராகத்தான் அறிமுகமானார். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் ஐந்து கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். ஆனால், அதன்பின் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதர்வா நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தில் தமனும் மற்றொரு நாயகனாக நடித்து வருகிறாராம். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.
தமிழில் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் இசையமைப்பாளர்களாகவும், நடிகர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு முன்பே நாயகனாக நடித்தவர் தமன்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025