தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!
13 மாசி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19095
எட்டாம் திகதி காலையில் அந்த கிராமத்தில் வசித்த 30,000 பேர்களை ஒரு சேர கொன்று குவித்தது எரிமலை.
எரிமலை குழம்புகள் உடலில் படுவதற்கு முன்னர் ஓடி தப்பி உயிர்காக்க முடியாதா? என ஒரு கேள்வி தோன்றியது. பல ஆராய்ச்சியாளர்கள் இதற்கு பதிலளித்துள்ளார்கள். மொழி பெயர்த்தோம்.
'நூறு அல்லது இருநூறு மீட்டர்களுக்கு தொலைவில் எரிமலை குழம்புகள் இருந்தாலும் அதன் வெப்பம் மிக கொடியது. வெப்பம் உடலின் வெளிப்பகுதியை எரிப்பதற்கு முன்னர்.. உடலின் உள்பகுதி வேகமாக வெப்பமாகும். எரிமலையின் வெப்பத்தில் உடல் வெளியில் எரிவதற்கு முன்னர் உடலுக்குள் இருக்கும் ஈரல், இதயம் கருகிவிடும். இரத்தம் கொதித்து நரம்புகள் வெடித்துவிடும். மூளை உடனடியாக இறந்துவிடும். நீங்கள் உயிர்பிழைப்பதற்கு வாய்ப்புகளே இல்லை!' என்கிறார் பேராசிரியர் ஒருவர்.
நூறு மீட்டர்களில் எரிமலை குழம்புகள் வந்துகொண்டிருக்கும் போது உங்களால் ஓடி தப்ப முடியாதாம். உறங்கிக்கொண்டிருந்தவர்கள் எப்படி தப்ப முடியும்?
நீங்கள் ஏற்கனவே இறந்த நிலையில்.. எரிமலை குழம்புகள் உங்கள் வெற்று உடலை உருக்கி, எலும்பு சதை என எந்த வித்தியாசமும் இல்லாமல் செய்து, தொடர்ந்து முன்னேறும்.
Saint-Pierre நகரில் வசித்த 30,000 பேரையும் எரிமலை இவ்வாறே இல்லாதொழித்தது.
காலை 10 மணிக்குள் அந்த நகரில் மரங்களும் இல்லை மனிதர்களும் இல்லை. வீடுகள், கால்நடைகள், சிறிய செடி கொடி புல் பூண்டு எதுவும் இல்லை. கடல் எல்லை வரை வந்து தண்ணீரை தொட்டவாறு நின்றது எரிமலை.
எதிர்பாரா விதத்தில் நபர் ஒருவர் Saint-Pierre நகருக்குள் இருந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு மீட்புக்குழுவுக்காக காத்திருந்தார். முப்பதாயிரம் பேர்களில் உயிர்பிழைத்த உலகின் மிகப்பெரிய அதிஷ்ட்டசாலி அவர்.
மீட்புக்குழு தீவை வந்தடைய நான்கு நாட்கள் ஆனது.
-நாளை.