Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : நகைக்கடையை கொள்ளையிட முயற்சித்த சிறுவர்கள்.. லாவகமாக கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்!!

பரிஸ் : நகைக்கடையை கொள்ளையிட முயற்சித்த சிறுவர்கள்.. லாவகமாக கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்!!

30 தை 2025 வியாழன் 20:00 | பார்வைகள் : 8421


பரிசில் உள்ள நகைக்கடை ஒன்றை 15 வயதுடைய இரு சிறுவர்கள் கொள்ளையிட முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

பரிஸ் 5 ஆம் வட்டாரத்தின் rue Monge வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றுக்குள் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி அளவில் இரு சிறுவர்கள் நுழைந்துள்ளனர். அவர்களிடம் கத்தி மற்றும் போலி துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது.

அவர்கள் கடையினை கொள்ளையிட முயன்றபோது, கடையில் பணிபுரியும் ஊழியர் கடைக்கு வெளியே தப்பி ஓடியுள்ளார். பின்னர் கைகளில் இருந்த ‘ரிமோட்’ மூலம் கடையில் கதவினை பூட்டியுள்ளார். கொள்ளையர்கள் இருவரும் கடைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களால் அந்த இலத்திரனியல் பூட்டினை உடைக்க முடியவில்லை.

பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு, குறித்த இரு சிறுவர்களும் கொள்ளையிடப்பட்டனர்.



அவர்கள் இருவரையும் கடைக்குள் வைத்து பூட்டி, காவல்துறையினரிடம் சிக்க வைத்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்