மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!
31 தை 2025 வெள்ளி 07:30 | பார்வைகள் : 6334
அடுத்த ஆண்டுகளில் பிரான்சில் மின் உற்பத்தியை அதிகரிக்க பிரெஞ்சு மின்சார வாரியம் (Électricité de France) திட்டமிட்டுள்ளது.
பிரான்சில் அணு உற்பத்தி முழு மூச்சில் இயக்கப்பட்டு வருவதை அடுத்து, இந்த உற்பத்திகளை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனவரி 30, நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 335 தொடக்கம் 365 வரையான ’டெராவாட் மணித்தியாலம்’ (térawattheures -TWh) உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, 2026-2027 ஆம் ஆண்டுகளில் 350 தொடக்கம் 370 வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக விரைவில் Flamanville நகரில் உள்ள அணுமின் நிலையத்தையும் (Flamanville 3 EPR ) திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 12 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் அதனை திருத்தப்பணிகள் மேற்கொண்டு திறப்பதன் மூலமாக மேற்குறித்த மின் உற்பத்தி அளவினை அடையமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Coupons
Annuaire
Scan