மரணத்தின் விளிம்பில் சிறார்கள்... அவசர உதவி கோரிய ஐ.நா
                    31 தை 2025 வெள்ளி 09:11 | பார்வைகள் : 4656
காஸா பகுதியில் உள்ள 2,500 சிறார்கள் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக குறிப்பிட்டு, அவர்களை சிகிச்சைக்காக உடனடியாக வெளியேற்ற வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க மருத்துவர்கல் நால்வர் கடந்த 15 மாதங்களாக கடும் போர் சூழலுக்கு மத்தியில் காஸாவில் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பை அடுத்தே சிறார்கள் தொடர்பில் அவசர உதவிக்கு ஐ. நா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிக மோசமான நிலையில் இருக்கும் 2,500 சிறார்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 19 அன்று போர்நிறுத்தம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, 12,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ வெளியேற்றத்திற்காக காத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.
அதில் 2,500 சிறார்கள் மிக அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்த சில வாரங்களில் இந்த சிறார்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், அனைவரும் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் நாளை இறக்கலாம், இன்னும் சிலர் அதன் அடுத்த நாள் இறக்கலாம் எனவும் அவர்களின் நிலை குறித்து இன்னொரு மருத்துவர் விளக்கமளித்துள்ளார். 2,500 சிறார்கள் விவகாரத்தில் இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் வெளியேற்றப்படலாம். ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்றே மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ரஃபா எல்லை ஊடாக வெளியேற பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால், சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியேறுபவர்கள், மீண்டும் ரஃபா எல்லை வழியாக திரும்ப உத்தரவாதம் இல்லை என்றே தகவல் கசிந்துள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan