Paristamil Navigation Paristamil advert login

தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் அஜித் - தனுஷ் படங்கள் -வெற்றி யாருக்கு?

தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் அஜித் - தனுஷ் படங்கள் -வெற்றி யாருக்கு?

31 தை 2025 வெள்ளி 12:27 | பார்வைகள் : 3224


தமிழ் புத்தாண்டு தினத்தில் அஜித் மற்றும் தனுஷின் படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ் புத்தாண்டு வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் பிப்ரவரி 6ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் இன்னொரு படமான ’குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தினத்தில் தான் தனுஷின் ’இட்லி கடை’ படமும் வெளியாகும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அஜித்துடன் மோத விரும்பாத தனுஷ் படக்குழுவினர் ரிலீஸ் செய்தியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’இட்லி கடை’ திரைப்படமும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகவும் அதனை உறுதி செய்யும் வகையில் புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ’குட் பேட் அக்லி’ மற்றும் ’இட்லி கடை’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்