உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி… கெத்தாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா

31 தை 2025 வெள்ளி 13:32 | பார்வைகள் : 3253
மகளிர் U19 உலகக்கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
கோலாலம்பூரில் நடந்த அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுக்கு 113 ஓட்டங்களே எடுத்தது.
டெவினா பெர்ரின் 45 (40) ஓட்டங்களும், அணித்தலைவர் அபி நோர்க்ரோவ் 30 (25) ஓட்டங்களும் எடுத்தனர்.
பருணிகா சிசோடியா, வைஷ்ணவி ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், ஆயுஷி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கொன்கடி த்ரிஷா (Gongadi Trisha) 35 (29) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும் கமலினி 56 ஓட்டங்களும், சனிகா 11 ஓட்டங்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்திய அணி 15 ஓவரில் 117 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, பிப்ரவரி 2ஆம் திகதி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3