Paristamil Navigation Paristamil advert login

இந்த 3 விடயங்களை பின்பற்றினால் மின்கட்டணத்தை குறைக்கலாம்

இந்த 3 விடயங்களை பின்பற்றினால் மின்கட்டணத்தை குறைக்கலாம்

31 தை 2025 வெள்ளி 15:02 | பார்வைகள் : 3194


கோடை காலம் நெருங்கிவரும் நிலையில் மின்கட்டணத்தை குறைப்பதற்கான காரணங்கள்.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு சில விடயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கோடை காலத்தில் முக்கியமாக மின்கட்டணம் அதிகமாக வரும்.

கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.
ஆனால், நீண்ட நேரம் AC ஓடினால் மின்கட்டணமும் தலைசுற்றும் அளவுக்கு வந்துவிடும். நாம் ஏசியை ஆன் செய்வதற்கு முன்பு அறையின் ஜன்னல் மற்றும் கதவை மூட வேண்டும்.

இதனால், குளிர் காற்று வெளியே போகமாலும், அனல் காற்று உள்ளே வராமலும் இருக்கும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்களது ஏசி கடினமாக உழைக்க வேண்டும்.

இதனால் மின்சாரமும் அதிகம் தேவைப்படும்.
ஏசியுடன் மின்விசிறியைப் பயன்படுத்தும்போது அது அறையின் ஒவ்வொரு மூலையிலும் ஏசி காற்றைச் செலுத்த உதவுகிறது. இதனால், நீங்கள் ஏசி வெப்பநிலையை மிகவும் குறைவாக வைக்க தேவையில்லை.

இதனால் மின்சாரமும் சேமிக்கப்படும். இரண்டாவதாக பல வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவன் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம். இதன் மூலம் மின்கட்டணத்தை கட்டுப்படுத்தலாம்.

மூன்றாவதாக, நீங்கள் வீடுகளில் இருந்து சிறிது நேரம் வெளியில் சென்றாலும் விளக்குகள், மின்விசிறியை ஆஃப் செய்துவிட்டு செல்லுங்கள்.   

 

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்