தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!
11 மாசி 2018 ஞாயிறு 10:33 | பார்வைகள் : 18565
இந்த தீவில் வசித்த Caribs எனும் பழங்குடியினருக்கு பாஷைகள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்த மலை ஒரு மோசமான மலை என்பது மட்டும் தெரிந்திருந்தது.
விஷத்தை கக்கும் பாம்பு போல், என்றேனும் இந்த மலை தன் எரிமலைக் கூம்புகளை திறந்து நெருப்புகளை கக்கும் என தெரிந்து வைத்திருந்தனர்.
1792 ஆம் ஆண்டிலும், 1851 ஆம் ஆண்டிலும் சனத்தொகை குறைந்த காலப்பகுதியில் எரிமலை வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் குறித்து எங்கேயும் பதிவாகவில்லை. ,ll
1900 ஆம் ஆண்டு எரிமலை கூம்பில் மெலிதாக புகை மண்டலம் கிளம்பியது. அத்தோடு அது அடங்கி, இரண்டு வருடங்களின் பின்னர், 1902 ஆம் வருடம், ஏப்ரல் 23 ஆம் திகதி மீண்டும் எரிமலை தனது கூம்புகளை திறந்தது. கடும் சிவப்பு வண்ணத்தில் மலையில் கூம்பு தகதகத்தது.
25 ஆம் திகதி அங்கிருந்து சாம்பல்கள் காற்றில் பறக்க ஆரம்பித்தன. எரிமலை கூம்பில் இருந்து சம்பல்கள் பறப்பது அத்தீவில் அவ்வப்போது நடப்பது தான். இதுவும் அது போல ஒன்றுதான் என மக்கள் அமைதி காத்தனர்.
மறுநாள் 26 ஆம் திகதி, சம்பல்கள் மிக மோசமாக புறப்பட ஆரம்பித்தன. அருகில் இருக்கும் குளம் குட்டைகளிலெல்லாம் சாம்பல்கள் மிதக்க ஆரம்பித்தன.
27 ஆம் திகதி, சில மலையேற்றம் செய்யும் நபர்கள் மலை மீது ஏறினார்கள். மலைமீது இருந்த சிறிய குட்டை ஒன்று கைகள் வைக்க முடியாத அளவு வெந்நீராக மாறியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். குட்டையில் சில குதிரைகளும் செத்து மிதந்தன.
ஏப்ரல் 30 ஆம் திகதி, இந்த நீர்த்தேக்கங்கள் இன்னும் கொதி நீராக மாறியது. சில மரங்கள் நின்ற பாட்டிலேயே கருகின.. விலங்கினங்கள் அனைத்தும் எதிர் திசையில் ஓடியது..
மே மாதம் 2 ஆம் திகதி. இரவு 11.30 மணிக்கு, ஊர் மொத்தமும் உறங்கிக்கொண்டிருக்க.. பாரிய வெடிச்சத்தம் கேட்டது. மலை மற்றும் மலையடிவாரங்களில் நில நடுக்கம் ஏற்பட்டு சில பாறைகள் உருண்டன. மக்களுக்கு பயம் பீடித்தது.
மறுநாள், 3 ஆம், 4 ஆம், 5 ஆம் திகதிகளில் காற்றின் மீண்டும் சாம்பல்கள் கலக்க ஆரம்பித்தன. வீசும் காற்றில் கண்ணுக்கு புலப்படாத சாம்பல் கலந்தது.
உள்ளூர் பத்திரிகை ஒன்று, ஆபத்துக்கள் ஒன்றும் இல்லை. பயப்பிடவேண்டாம் என அறிவித்தது.
அடுத்த மூன்றாவது நாள் மிகப்பெரும் ஆபத்து காத்திருந்ததை அப்போது மக்கள் அறிந்திருக்கவில்லை!!
-நாளை.