மியன்மாரில் நீடிக்கப்படும் அவசர கால நிலை
1 மாசி 2025 சனி 04:58 | பார்வைகள் : 888
மியன்மாரில் 5 ஆண்டாக அவசர காலநிலை நீடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மேலும் 6 மாத காலத்துக்கு அவசர கால நிலை நீடிக்கப்படுகிறது என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது. பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குறித்த காலப்பகுதியிலிருந்து மியன்மாரில் தொடர்ந்தும் இராணுவத்தினர் அவசரகால நிலையை நீடித்து வருவதால் கடந்த 2023, ஒகஸ்ட் மாதம் இடம்பெறவேண்டிய பொதுத்தேர்தலும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், மியான்மார் நாட்டில் மேலும் 6 மாத காலத்துக்கு அவசர கால நிலை நீடிக்கப்படுகிறது என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 5 ஆண்டாக மியான்மாரில் அவசர காலநிலை நீடிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.