Paristamil Navigation Paristamil advert login

வெள்ளம்.. மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வெள்ளம்.. மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

1 மாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 787


பெப்ரவரி 1 ஆம் திகதி, இன்று சனிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மூன்று மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை; (Vigilance rouge) விடுக்கப்பட்டுள்ளது.



Ille-et-Vilaine (35)
Loire-Atlantique (44)
Morbihan (56)

ஆகிய மூன்று மாவட்டங்களில் 70 தொடக்கம் 90 மி.மீ மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், அங்கு வெள்ள பாதிப்புகள் பெருமளவில் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு, அம்மூன்று மாவட்டங்களுக்கும் ‘சிவப்பு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பனிப்பொழிவு, பனிச்சரிவு, வேகமான காற்று போன்ற அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு (இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்கள் உட்பட) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்