Paristamil Navigation Paristamil advert login

DEEPSEEK: சீன AI அறிமுகம் - பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.9.34 லட்சம் கோடியை இழந்த உலக பணக்காரர்கள்

DEEPSEEK: சீன AI அறிமுகம் - பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.9.34 லட்சம் கோடியை இழந்த உலக பணக்காரர்கள்

1 மாசி 2025 சனி 05:26 | பார்வைகள் : 2151


வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு [ஏஐ] தொழில்நுட்பத்தின் அமெரிக்க நிறுவங்கள் மட்டுமே வல்லாதிக்கம் செலுத்திவந்த நிலையில் சீன நிறுவனம் புதிய ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக் (Deepseek) அறிமுகப்படுத்தியுள்ள ஏஐ மாடல் அமெரிக்க நிறுவனங்களைக் கதிகலங்க வைத்துள்ளது.

டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் ஆர்1 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஆகியவை பிரீமியம் முறையில் நவீன வசதிகளை வழங்கிவரும் நிலையில், டீப்சீக் ஆர்1 அனைத்து நவீன வசதிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.

இதனால் சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரிலும் உலகளவிலும் டீப்சீக் செயலி அதிகமான

டவுன்லோட்களை கடந்துள்ளது. டீப்சீக் ஏஐ அறிமுகம் பங்குசந்தையிலும்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் பூகம்பத்தை சந்தித்துள்ளன.

என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் இழந்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது.

என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் உடைய சொத்துமதிப்பில் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் [20.1 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது.
Oracle Corp இணை நிறுவனர் லேரி எலிசன் உடைய சொத்தில் 12 சதவீதம் [22.6 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனங்கள் அதிக செலவு செய்து தயாரித்துள்ள நிலையில் டீப்சீக் நிறுவனம் 6 மில்லியன் டாலர்களில் அதை உருவாகிவிட்டது.
டீப்சீக் உடைய தாக்கம் தொடர்வதால் முதலீட்டாளர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.

டீப்சீக் வருகை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்