ஆயிரம் நாட்களுக்கு மேலாக ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு பேராசிரியர்.. - மக்ரோன் கண்டனம்!!
1 மாசி 2025 சனி 08:52 | பார்வைகள் : 1140
பிரெஞ்சு பேராசியரான Cécile Kohler மற்றும் அவரது கணவர் கடந்த ஆயிரம் நாட்களுக்கு மேலாக ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
”கண்ணியமற்ற மற்றும் காரணமற்ற” சிறைத்தண்டனை இது என கண்டனம் வெளியிட்டுள்ள மக்ரோன், அவர்கள் மிகவும் மோசமாக மற்றும் கண்ணியமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், சிறைச்சாலை சித்திரவதை முகாம் போன்று இருப்பதாகவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பேராசியர் Cécile Kohler மற்றும் அவரது கணவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஈரானின் ரகசியங்களை ‘உளவு’ பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.