கங்கனாவுக்கு கணவராக நடிக்கும் கௌதம் கார்த்திக்…?
1 மாசி 2025 சனி 10:03 | பார்வைகள் : 498
நடிகர் கௌதம் கார்த்திக் கடந்த 2013ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் வை ராஜா வை, ரங்கூன், தேவராட்டம் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர், நடிகை கங்கனா ரனாவத்துக்கு கணவராக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஏ.எல். விஜய் இயக்கத்தில் மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்திற்கு லைட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக், கேமியோ ரோலில் நடிக்கிறாராம். இப்படத்தில் இவருடைய காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என்றும் இவர் கங்கனாவுக்கு கணவராக நடிக்கிறார் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.