Paristamil Navigation Paristamil advert login

தரையில் படுத்துறங்கும் கைதிகள்.... வெளியே காத்திருக்கும் 20,000 பேர்! - திணறும் சிறைச்சாலைகள்!!

தரையில் படுத்துறங்கும் கைதிகள்....  வெளியே காத்திருக்கும் 20,000 பேர்! - திணறும் சிறைச்சாலைகள்!!

1 மாசி 2025 சனி 10:19 | பார்வைகள் : 1406


பிரான்சில் சிறைவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் எண்ணிக்கை தொடர்பில் ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிடப்படுவது அறிந்ததே. டிசம்பர் 1 ஆம் திகதியோடு ஒப்பிடுகையில் ஜனவரி 1 ஆம் திகதி கைதிகளின் எண்ணிக்கை சிறிதளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கைதிகளின் எண்ணிக்கை 80,000 இற்கும் அதிகமாகவே காணப்படுகிறது. டிசம்பர் 1 ஆம் திகதியின் நிலவரப்படி 80,792 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை ஜனவரி 1 ஆம் திகதி0 80,669 ஆக குறைவடைந்துள்ளது. 

பிரான்சில் 61,000 வரையான அகதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளன. தற்போதுள்ள கைதிகளின் எண்ணிக்கை 129.3% சதவீதமாக உள்ளது.

16 சிறைச்சாலைகளில் அதன் அளவை விட 200% சதவீதம் அதிக கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், 4,310 கைதிகள் மெத்தைகளை தரையில் போட்டு உறங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை, இன்னும் 20,779  பேர் தங்களுக்கான சிறைத்தண்டனைக்காக வெளியே காத்திருக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்