Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மூவினத்தவர்களும் கொண்டாட புதிய விழா!

இலங்கையில் மூவினத்தவர்களும் கொண்டாட புதிய விழா!

1 மாசி 2025 சனி 11:12 | பார்வைகள் : 3327


இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

“தமிழர்கள், சிங்களவர்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் என நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரு நாள் நமக்கு வேண்டாமா?

இந்த அனைத்து சமூகங்களின் கலாச்சாரங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள், ஆடை பாணிகள் மற்றும் இசை ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒக்டோபரில் ஒரு பிரமாண்டமான தேசிய விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

நாம் பிரிந்திருந்தாலும் நம் குழந்தைகளை பிரிந்து இருப்பதற்கு இடமளிப்பது நல்லதல்ல. எங்கள் தலைமுறை யுத்தம் செய்ததிற்கு, எங்கள் குழந்தைகளின் தலைமுறை யுத்தம் செய்ய அனுமதிக்க மாட்டோம்.

“வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கின் அனைத்து குழந்தைகளும் ஒன்று சேரும் அரசாங்கமாக இந்த அரசாங்கத்தை நாங்கள் மாற்றுவோம்.”

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்