அமெரிக்காவில் மற்றுமொரு விமானம் விபத்து
1 மாசி 2025 சனி 13:32 | பார்வைகள் : 966
அமெரிக்காவின் வட கிழக்கு, ஃபிலடெல்ஃபியாவில் சிறிய விமானம் ஒன்று கட்டடங்களின் மீது மோதி விபதிற்குள்ளானதில், வீடுகள், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துக்கான காரணம், விமானத்தில் இருந்தவர்கள் யார், அவர்களில் எத்தனை பேர் உயிர் பிழைத்துள்ளார்கள் என்பன போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை நோயாளி மற்றும் அவரது தாய், விமானி உள்ளிட்ட 3 மருத்துவ பணியாளர்கள் குறித்த விமானத்தில் பயணித்துள்ளதாக ஏர் அம்பியூலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் அம்பியூலன்ஸ் தெரிவித்துள்ளது.