€210 மில்லியன் ’கிரிப்டோகரன்சி’ கொள்ளை.. ஒருவர் கைது!!
1 மாசி 2025 சனி 14:16 | பார்வைகள் : 1550
€210 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய ’கிரிப்டோகரன்சி’ (cryptomonnaies )இனை கொள்ளையிட்ட இளைஞன் ஒருவனை பிரெஞ்சு விமான நிலையம் ஒன்றில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரான்சுக்கு சொந்தமான கரீபியன் தீவுகளில் ஒன்றான Saint-Barthélemy தீவில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவர் பிரெஞ்சு விமான நிலையம் ஒன்றில் வைத்து கடந்தவாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர்,
தென்கொரியாவில் மிகவும் பிரபலமான ”Coinrail” எனும் கிரிப்டோகரன்சியினை கடந்த 2018 ஆம் ஆண்டில் ‘ஹக்’ செய்து கொள்ளையிட்டுள்ளார். அப்போது அதன் பெறுமதி 28 மில்லியன் யூரோக்கள் எனவும், தற்போது அதன் பெறுமதி 210 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ், மொராக்கோ, தென் கொரியா, ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற பல்வேறு நாடுகளில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. பரிஸ் சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டிருந்த நிலையில், மேற்படி நபரை பிரான்சைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. பின்னர் அவர் பிரான்சுக்கு வருகை தந்தபோது கடந்தவாரத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்படும் அதே நேரம் அவரது வீடும் சோதனையிடப்பட்டது. €700,000 யூரோக்கல் பெறுமதியுடைய வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களும், பல விலையுயர்ந்த கைக்கடிகாரங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.