Paristamil Navigation Paristamil advert login

49.3 அரசியலமைப்பை பயன்படுத்தும் பிரதமர்!!

49.3 அரசியலமைப்பை பயன்படுத்தும் பிரதமர்!!

2 மாசி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 1363


வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற 49.3 அரசியலமைப்பை பயன்படுத்துவேன் என பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத்திட்டத்தின் ‘சமூகநல பாதுகாப்பு’ பகுதி நாளை பெப்ரவரி 3, திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட உள்ளது. அதன்போது, மேற்படி அரசியலமைப்பு சட்டமூலத்தை பயன்படுத்தி, நிறைவேற்றப்படும் என பிரதமர் நேற்று பெப்ரவரி 1, சனிக்கிழமை அறிவித்தார்.

”எங்களைப் போன்ற ஒரு நாடு வரவுசெலவுத்திட்டம் இல்லாமல் இருக்க முடியாது. அதனை நிறைவேற்றவேண்டிய காலத்தை நாம் எப்போதோ கடந்துவிட்டோம். உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும். 49.3 தேவை என்றால் அதனை நான் தயக்கமின்றி பயன்படுத்துவேன்!” என அவர் தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்