பள்ளத்தாக்கில் மனிதர்கள் உருவாக்கிய குளம்!!
2 மாசி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18547
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் Les Gorges du Verdon ஆற்றினை பற்றி தெரிவித்திருந்தோம். அந்த பதிவினை இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள இணைப்பில் படித்துவிட்டு தொடரவும்...
படகு வாடகைக்கு இங்கு மணித்தியால அடிப்படையில் கிடைக்கும்... நிச்சயமாய் உங்களுக்கு ஒரு மணிநேரம் போதாது. இரண்டுமணிநேரமாக படகை எடுத்தால் இன்னொரு இடத்தையும் பார்த்துவிட்டு வரலாம்.
படகு சவாரியை தொடர்ந்து மேற்கொள்ளுவதன் மூலம், விதம் விதமான பாறைகள், அருவிகளை பார்வையிடலாம். குகை போலிருக்கும் ஒரு மறைவுப்பகுதிக்குள் சில நிமிடங்கள் வெயிலுக்கு மறைந்து படகில் இருந்தே ஓய்வெடுக்கலாம். உங்களுக்கு முன்னர் யாரேனும் அங்கு ஓய்வெடுக்கக்கூடும்... உஷார்!!
இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு குளம் இருக்கின்றது. அதை நீங்கள் அவசியம் பார்வையிடவேண்டும். அந்த குளம் மனித பலத்தினால் உருவாக்கப்பட்டது. பள்ளத்தாக்கின் முடிவில் அந்த குளம் உள்ளது. அவசியம் பார்வையிடவேண்டும்.
அக்குளத்தோடு மனிதர்களின் வேலை முடிந்துவிடவில்லை. இரு மலைகளை தொடுத்து ஒரு பாலம் அமைத்துள்ளார்கள். அங்கிருந்து மேலே மலையை பார்த்தாலும்.. கீழே ஆற்றினைப்பார்த்தாலும் ஆச்சரியம் ஆச்சரியம்தான்!!
இங்கு நீங்கள் போக விரும்பினால், முதல் நாள் மாலை இங்கு சென்று, மறுநாள் முதல் ஆளாய் சென்று நில்லுங்கள்... முக்கியமாய் கோடை காலத்தில்..
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே இது சுற்றுலாத்தலமாக இருந்தாலும், கடந்த சில வருடங்களில் இந்தப்பகுதி மிக 'பிஸி'யான சுற்றுலாத்தலமாக மாறிவிட்டுள்ளது உண்மை!!