வெள்ளம் : ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
2 மாசி 2025 ஞாயிறு 06:28 | பார்வைகள் : 852
வெள்ள அனர்த்தம் காரணமாக பெப்ரவரி 2, இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Eure, Ille-et-Vilaine, Loire-Atlantique, Morbihan, Somme மற்றும் இல்-து-பிரான்ஸ் மாவட்டமான Val-d'Oise இற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும், ஆறுகள், ஏரிகள் மற்றும் நதிகளின் நீர்மட்டம் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, வெள்ளம் காரணமாகமேலும் 21 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும், பனிப்பொழிவு காரணமாக 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.