Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் பலி

2 மாசி 2025 ஞாயிறு 08:32 | பார்வைகள் : 3294

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் இறந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள கிராமப்பகுதி ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

குறித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பிற்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினர் 18 பேர் தீவிரவாதிகள் 12 பேர் என மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர்.

இந்த மோதலைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் இறந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள கிராமப்பகுதி ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
குறித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பிற்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினர் 18 பேர் தீவிரவாதிகள் 12 பேர் என மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர்.

இந்த மோதலைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்