வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
2 மாசி 2025 ஞாயிறு 10:49 | பார்வைகள் : 755
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த சந்தேக நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கணக்காளர் ஒருவரோ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்றையதினம் அதிகாலை 12.15 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-648 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பயணப்பையிலிருந்து சுமார் 53 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 35,800 "மென்செஸ்டர்" வகையைச் சேர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 179 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட சிகரெட்களுடன் சந்தேக நபரை எதிர்வரும் 05ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.