ஒவ்வொரு வருடமும் CONTRÔLE TECHNIQUE?
2 மாசி 2025 ஞாயிறு 11:32 | பார்வைகள் : 2837
வாகனங்களிற்கான பரிசோதனைச் செயற்பாட்டுச் சான்றிதழான CONTRÔLE TECHNIQUE தற்போது இரண்டு வருடங்களிற்கு ஒரு முறை மட்டுமே செய்யப்பட்டு வந்துள்ளது.
மிக விரைவாக வளி மாசடைவைக் கட்டுப்பாட்டைத் தடுப்பதற்காக குறிப்பிட்ட வாகனங்களிற்கு வருடாந்தம் CONTRÔLE TECHNIQUE செய்யவேண்டி வர உள்ளது.
முக்கியமாகப் பத்து வருடங்கள் தாண்டிய வாககனங்களிற்கு இந்தக் கட்டுப்பாடு வரவுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதற்செயற்பாட்டை, ஜேர்மனியின் வாகனங்களிற்கான பரிசோதனைச் செயற்பாட்டுச் சான்றிதழ் வழங்கும் TÜV ஆரம்பித்துள்ளது. 150.000 வாகனங்களிற்கு வருடாந்த பரிசோதனைச் செயற்பாட்டுச் சான்றிதழ் பெறவேண்டிய கட்டாயத்தினை அறிவிததுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் மிகவிரைவில் இதனை அமுல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் வாகன உரிமையாளர்களிற்குப் பெரும் பொருளாதாரச் சுமை ஏற்பட உள்ளது.
ஏற்கனவே பிரானசில் மக்களின் கொள்வனவுத்திறன் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், இந்தச் சட்டத்தினால் வருடாந்தம் 80 இலிருந்து 120 யூரோ வரையிவான செலவு அதிகரிக்க உள்ளது.