அக்கினியுடன் சங்கமமான மாவையின் பூதவுடல்
2 மாசி 2025 ஞாயிறு 11:52 | பார்வைகள் : 606
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை (02) பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது புதவுடல், ஞாயிற்றுக்கிழமை (02) காலை இறுதிக் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், மத குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
1942ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி பிறந்த மாவை. சோ.சேனாதிராஜா, அண்மையில் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 29ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.