Tuileries : இருக்கைகளை தத்தெடுத்து பராமரிக்க - கோரிக்கை!!
2 மாசி 2025 ஞாயிறு 12:08 | பார்வைகள் : 1705
jardin des Tuileries பூங்காவில் உள்ள இருக்கைகளை தத்தெடுத்து அதனை பராமரிக்க கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பூங்காவில் உள்ள 115 இருக்கைகளும் 50 புதிய இருக்கைகளையும் பராமரிக்கவேண்டும் எனவும், ஒருவர் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இருக்கைகளையோ அவ்வாறு பராமரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 10 ஆண்டுகள் அதனை பராமரிக்க மொத்தமாக €5,000 யூரோக்கள் செலவிடவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விளம்பரங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தில் லூவர் அருங்காட்சியகமும் இணைந்துள்ளது.