■ மோன-லிசா ஓவியத்தை பார்வையிட 'தனி நுழைவுச் சீட்டு' தேவை!!
2 மாசி 2025 ஞாயிறு 12:27 | பார்வைகள் : 1315
லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள மோன-லிசா ஓவியத்தினை பார்வையிட இரண்டாவதாக ஒரு நுழைவுச் சீட்டு தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
லூவரின் இயக்குனர் Laurence des Cars, இத்தகவலை இன்று பெப்ரவரி 2, ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். 'லூவரினை பார்வையிட ஒரு நுழைவுச் சீட்டும், அங்குள்ள மோன-லிசா ஓவியத்தினை பார்வையிட மற்றுமொரு நுழைவுச் சிட்டு தேவை என்பதே கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்' என அவர் குறிப்பிட்டார்.
லூவரினை நவீனமயமாக்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் உலகத்தரத்துக்கு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு பகுதி பகுதியாக அதனை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2031 ஆம் ஆண்டு இந்த திட்டங்கள் நிறைவுக்கு வரும்.
மோன-லிசா ஒவியத்தினை தனி கூடாரத்தில் வைத்து காட்சிப்படுத்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லூவருக்கு வரும் பார்வையாளர்கள் தனியே மோன-லிசாவினையும் பார்வையிட முடியும், இல்லையென்றால் இரண்டு நுழைவுச் சீட்டுக்கள் பெற்றுக்கொண்டு அருங்காட்சியகம் முழுவதையும் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.